திருத்துறைப்பூண்டி, மார்ச்18- திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ப.நாகராஜ், தாயாரும் ஒன்றிய மகளிரணி செயலாளர் நா.ரேவதியின் மாமியாருமான ப.அஞ்சம்மாளின் படத் திறப்பு நடைபெற்றது .
நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தின.குமார் முன்னிலையில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர். வீ.மோகன் படத்தினை திறந்து வைத்தும் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் படத்திறப்பு நிகழ்வு ஏன் என்பதை பற்றியும் அஞ்சம்மாள் கண் கொடை வழங்கியதை எடுத்துக் கூறியும் சிறப்பான ஒரு . உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ்,, மாவட்டத் துணைத் தலைவர் கி.அருண் காந்தி, மன்னை மாவட்ட இணைச் செய லாளர் வீ.புஷ்பநாதன், கோட்டூர் ஒன்றிய தலைவர் எம்.பி.குமார், செ.ராமலிங்கம், திருத்துறைப்பூண்டி நகர தலைவர் சு.சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர் இரா.அறிவழ கன், ஒன்றிய துணை செயலாளர் ந.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.மதன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ரெ.புகழேந்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர் அஜெ.உமாநாத், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.சுரேஷ் முரளி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கேஅழகேசன், நகர இளைஞரணி தலைவர் ஆ.சந்தோஷ், நகர துணை செயலாளர் ப.சம்பத் குமார், ஆதிரங்கம் சு.வீரமணி, வேதை தியாகு, மாராச்சேரி ச.சுரேஷ், இணையர் சு.மலர்விழி, சீராவட்டம் தங்க.கிருஷ்ணன், பன்னத்தெரு செல்லப்பா, மற்றும் பன்னத்தெரு கிராம மக்கள், உற்றார் உறவினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.