குடியேற்றம், மார்ச் 18- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய் யம் மற்றும் சிப்லா நுரையீரல் மய்யம் ஆகியவை மூலம் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் பி.தனபால் அனைவரையும் வரவேற்றார். பகுத் தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் மருத்துவ முகாம் தொடக்க உரையாற்றினார். வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார்,மாவட்ட காப்பா ளர் வி.சடகோபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
குடியேற்றம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தார். குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன், குடியேற்றம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்கள். குடியேற்றம் நகர மன்ற, உறுப்பினர்கள் ஆட்டோ பி. மோகன்,எம்.சுமதி மகாலிங்கம், தொழிலதிபர் ஆர்.ஆர்.ரவி ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூ விழுதல்,கண் புரை நீக்குதல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்துக் கொண்டு உரிய சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இம்முகாமில் ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை அளவு பரிசோதனையும் நடைபெற்றது. கண் புரை நீக்குதல் அறுவை சிகிச்சைக்கு 20 நபர்கள் சென்னை அழைத்து செல்லப்பட்டார்கள்.
பகுத்தறிவாளர் கழக தன்னார் வலர்கள் ஆகாஷ், அஜீத், தரணி, திவாகர்,பிரசாந்த், ரிஷி, திகழரசு மற்றும் சிவகுமார் ஆகியோர் முகா மிற்கான ஏற்பாடுகளை செய்திருந் தனர். முகாம் நிறைவில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் க .பரம சிவம் நன்றி உரையாற்றினார்.