குத்தாலம், ஜூலை 9 – மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் எழுச்சி யோடு நடைபெற்றது.
மயிலாடுறை மாவட்டம் குத்தா லத்தில் ஒன்றிய திராவிடர் கழகத் தின் சார்பில் 8.-7.-2023 அன்று மாலை 6 மணியளவில் குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் அன்பு-அருள் சங்கமம் குழுவினரின் பெரியார் இன்னிசை நிகழ்வோடு தொடங்கியது.
ஒன்றிய கழகத் தலைவர் சா. முருகையன் தலைமையேற்க கழக மாவட்ட துணைச் செயலாளர் அரங்க. நாகரத்தினம், குத்தாலம் நகர தலைவர் சா.ஜெகதீசன், மயி லாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன் சீர்காழி ஒன்றியத் தலைவர் சா. சந்திர சேகரன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமர. வைத்தியநாதன் ஆகியோர் உரை யாற்றியதைத் தொடர்ந்து திரா விடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
சிறப்புரை ஆற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தனது உரையில், வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பங்கு, அதன் நீட்சியாக நடைபெற்ற கோவில் நுழைவுப் போராட்டம், அனைத்து ஜாதி யினர் அர்ச்சகர் போராட்டத்தின் வெற்றி ஆகியவற்றை நினைவூட்டி னார். சமூகநீதிச் சட்டங்களைத் தீட்டி அனைவருக்கும் அனைத்தும் என்ற இலக்கை எட்டுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வரும் “திராவிட மாடல்” ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பணிகளையும், அதற் குரிய அடிப்படையை உருவாக்கிய நூற்றாண்டு விழா நாயகர் முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளையும் விவரித்தார்.
தமிழ்நாடு அரசின் முற் போக்குச் செயல்பாட்டைத் தாங்க முடியாமல் இடையூறு ஏற்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மற் றும் ஒன் றிய அரசின் போக்குகளைச் சுட் டிக்காட்டி, இந்தச் சதிகளை முறி யடித்து மதச்சார்பற்ற, ஜன நாயக அரசை அமைத்திட வேண் டியதன் அவசியத்தையும், இந்தியா முழுக்க அனைத்து எதிர்கட்சி களையும் ஒருங்கிணைத்துச் செய் யப்பட்டு வரும் முயற்சிகளுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாகத் திகழ்வதை எடுத்துரைத்தார்.
தந்தை பெரியா ரின் கொள்கை களை வெற்றிகர மாக்கிவரும் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தளராத செயல்பாடுகளையும், சனா தனத்தை முன்னிறுத்தி, தமிழ்நாட் டின் ஆளுமைகளை வளைக்கப் பார்க்கும் ஆரியத்துக்கு எதிரான அவரது அறைகூவல்களையும் விவரித்தார்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்ட குத்தாலம் பேரூர் திமுக செயலாளர் எம். சம்சுதீன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மங்கை எம். சங்கர், குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பகுத்தறிவு ஊடகத்துறை தலைவர் அழகிரிசாமி, ஆகியோருக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சால்வை அணிவத்தார்.
நிகழ்வில் குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர் மா.பாலசுந்தரம், நகரச் செயலாளர் பூ.சி. காமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், கொள்ளிடம் ஒன் றியச் செயலாளர் பூ.பாண்டுரங்கன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. செல்வம், மயிலாடுதுறை தங்க.செல்வராஜ், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஜெகன்.சாமிக் கண்ணு, மயிலாடுதுறை நகர பகுத் தறிவாளர் கழக தலைவர் க.செல்வராஜ், கொக்கூர் தோழர்கள் கு.இளஞ்செழியன், இளஞ்சேரன், மாதிரிமங்கலம் எஸ்.மூர்த்தி, ஜெய ராமன், மன்னர்மன்னன் மற்றும் திராவிடர் கழக திராவிட முன் னேற்ற கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக ஒன்றிய துணைச் செயலாளர் தி.சபாபதி, நன்றி கூறினார்.