கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

18.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ் மொழி பேச தெரிந்தவர்களை தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் அமர்த்துங்கள், ரயில்வே அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வலியுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 1200 வாக்காளர்களுக்கு ஒரு பூத், தேர்தல் ஆணையம் யோசனை.
* கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா, தெலங்கானா சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
* மசோதாவுக்கு ஒன்றிய அரசின் பிரதமரை சந்தித்து ஒப்புதல் பெற முதலமைச்சர் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மேற்கு வங்காளத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கிதேஷ்வர் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் பல நூற்றாண்டுகளாக இருந்த கோயில் தடை நீக்கப்பட்டது.
* ஒரே நாடு, ஒரே தேர்தல், மேனாள் நீதிபதி ஷா எதிர்ப்பு.
* கும்ப மேளாவில் 4 லட்சம் பேர் மோட்டார் வாகனம் ஓட்டி வருமானம் கிடைத்தது, யோகி பேச்சு. ‘4 லட்சம் மகாகும்பத் தொழிலாளர்கள் வேலைக்காக 144 ஆண்டுகள் காத்திருப்பார்களா?’ அகிலேஷ் உ.பி. அரசிடம் கேள்வி. மகா கும்பமேளாவுக்குப் பிறகு காணாமல் போனவர்கள் குறித்து பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து கவலை.
* தன்னை சந்தித்த அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டுக்கு, கங்கை தண்ணீரை கும்பமேளா பரிசாக தந்தார் பிரதமர் மோடி.
* பெரியார், தமிழ் மொழி மீதான விமர்சனம் குறித்து அருண் ஜகன்னாதன் கட்டுரை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.2,150 கோடி செலவாகும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது; ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
* ஹோலி வன்முறை வெடித்தது, ஒடிசா – முழுவதும் புவனேஸ்வரில் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர், தலைநகரமான புவனேஸ்வரில், இரண்டு கொலைகளும் மது போதையில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
தி இந்து:
* வாக்காளர் எண், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பு; மாநிலங் களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.
* இரட்டை எஞ்சின் ஆட்சி என பிதற்றிக் கொள்ளும் பாஜக ஆட்சி மணிப்பூரில் தோல்வி யடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்.
* சமூக நீதி அமைச்சகத்தால் பிற்படுத்தப்பட் டோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை செலவு களைச் சமாளிக்க போதுமானதாக இல்லை: நாடாளுமன்ற குழு அறிக்கை.
* 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அளித்த கிட்டத்தட்ட 75 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று மாநிலங்களவையில் அரசே ஒப்புதல்.
தி டெலிகிராப்:
* சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்வியின் போது சட்டமன்றத்தில் இருந்து முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளிநடப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* குடியிருப்பு அடிப்படையிலான மருத்துவ ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்ற முடிவை எதிர்த்து போராட தமிழ்நாடு தயாராகிறது

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *