வட மாநிலங்களில் ேஹாலிப் பண்டிகை என்ற கூத்தாட்டம் கொண்டாட்டமாக நடைபெறும். வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் ஊடுருவியதால் சென்னை போன்ற நகரங்களிலும் இந்த ேஹாலிப் பண்டிகை தலை தூக்க ஆரம்பித்து விட்டது.
இதற்காகச் சொல்லப்படும் கதை வழக்கம் போலவே ஆரிய – திராவிடப் போராட்டத்தின் மய்யப் புள்ளிதான்.
அசுர குலத்தைச் சேர்ந்த இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்ததால், அவனைக் கொல்ல சகோதரி ேஹாலிகாவின் உதவியை நாடிட, அவள் பிரகலாதனைக் கொல்லும் முயற்சியில் மாண்டு போனாள்.
நெருப்பில் இணைந்து சாம்பலானதை நினைவு கூர்ந்து இந்த ேஹாலிப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஒரு கட்டுக்கதை!
பூமியைப் பாயாக சுருட்டிக் கொண்டு இரண்யாட்சதன் கடலில் போய் ஒளிந்து கொண்டான் என்று தீபாவளிக்குக் கதை சொல்லுவதில்லையா?
எதிலும் சுரன் – அசுரன் போர் அதாவது ஆரியர் – திராவிடர் போர் என்பதை மய்ய்பபடுத்தி, பாதிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே விழாவாகக் கொண்டாட செய்யும் பக்தி – மதத்தின் பெயரால் செய்யப்படும் சூழ்ச்சியாகும்.
ேஹாலிப் பண்டிகையும் அந்த வகையைச் சார்ந்ததே – இதை விழா என்று சொல்லி நடத்தப்படுகிறது.
அநாகரிகக் கூத்துக்குப் பஞ்சமே இல்லை. அதுவும் இவ்வாண்டு எல்லை மீறிய ஆபாசங்கள் அக்கிரமங்கள் நிர்வாணக் கூத்தாக நடந்தேறியுள்ளன.
தலைநகர் டில்லியில் உள்ள துவாரகா பகுதியில் வீட்டில் இருந்த சில பெண்களை தெருவில் இழுத்துவந்து ஆடைகளைக் கிழித்து வண்ணம் பூசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராஜூ குமார், பிரீத்தம் அப்பெண்களின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது, அவர்களோடு ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டான். இவன் கடுமையான போதையில் இருந்ததால் போதை தெளிந்த பிறகு காவல்நிலையம் கொண்டுவருமாறு காவல்துறையினர் கூறிவிட்டுச் சென்றனர்.
மத்தியப் பிரதேசம் ராம்நகர் காவல்நிலையத்துக் குட்பட்ட மன்கிசார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் கேவாட்; ேஹாலி பண்டிகையில் முன்தினம் இரவு சங்கரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தீபு கேவாட் என்பவர் ஹோலி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சத்தமாக பாட்டுப் போட்டுள்ளார். இதனால் சங்கரின் குழந்தைகளால் படிக்க முடியவில்லை.
இதையடுத்து சங்கர், தீபுவிடம் பாட்டுச் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தீபுவும் அவரது உறவினர்கள் 5 பேரும் சேர்ந்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சங்கரின் தந்தை முன்னா கேவாட் (64 வயது) படுகாயமடைந்தார்.
தரையில் சரிந்து விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முன்னா கேவாட் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தீபு மற்றும் அவரது உறவினர்கள்மீது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதியம் பத்லாப்பூர் பகுதியில் உள்ள உல்ஹாஸ் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. இதை அறியாமல் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஆர்யன் மேதர் (15 வயது), ஓம் சிங் தோமர் (15 வயது), சித்தார்த் சிங் (16 வயது), மற்றும் ஆர்யன் சிங் (16 வயது) எனத் தெரிய வந்துள்ளது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக பத்லாப்பூர் கிராமப்புற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உ.பி. பாராம்பூர் கிராமத்துக்கு அருகில் மது அருந்தி இரு சக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்த நால்வர் விபத்துக்கு ஆளாகிப் பரிதாப மரணம் அடைந்தனர்.
இதுவரை ேஹாலிப் பண்டிகையில் நடைபெற்ற வன்முறைகள், பாலியல் சீண்டல்கள் உள்பட
4500–க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன.
பண்டிகை என்ற பெயரால் உயிரிழப்புகள் நடப்பது விரும்பத் தக்கதுதானா? பெண்களின் ஆடையைக் கிழித்து வண்ணப் பொடிகளைத் தூவுவது எல்லாம் அருவருக்கத்தக்கது அல்லவா! இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமாம்! வெட்கக் கேடு!