திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறி பலி
திருச்செந்தூர், மார்ச் 17 திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறி பலியானார்.
இதன் விவரம் வருமாறு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் விடுமுறை நாளான நேற்று (16.3.2025) கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்நிலையில், காரைக்குடி, சொக்கலிங்கம் செட்டியார் தெருவைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் (வயது 50) நேற்று முன்தினமே (15.3.2025) தனது குடும்பத்தார் 20 பேருடன் வந்து விடுதியில் தங்கியுள்ளார். நேற்று (16.3.2025) காலை கோயிலில் குடும்பத்தினர் சிலர் முடிகாணிக்கை செலுத்தி விட்டு சாமி தரிசனம் செய்வதற்காக பொது தரிசனப்பாதை, மூத்த குடிமக்கள் வழி மற்றும் ரூ.100 கட்டண தரிசன வழிகளில் காத்திருந்தனர்.
அப்போது ரூ.100 கட்டண வரிசையில் நின்றிருந்த ஓம்குமாருக்கு கூட்ட மிகுதியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற னர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடவுள் காப்பாற்றவில்லையே!

Leave a Comment