ஆஸ்திரேலியாவில் தமிழர் தலைவரின் கூட்டங்கள் : பங்கேற்றோரின் மகிழ்ச்சிப் பகிர்வுகள்

viduthalai
4 Min Read

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அண்டர்வுட் பார்க் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்ற பன்னாட்டு மகளிர் நாள் விழாக் கொண்டாட்டத்தில் ‘தமிழக பெண்கல்வியும் தாக்கமும் – அன்றும் இன்றும்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களும், ‘பெரியாரும் பெண்ணியமும்’ என்ற தலைப்பில் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களும், ‘பெரியாரும் ஆசிரியரும்’ என்ற தலைப்பில் கவிஞர் எ. இரவிச்சந்திரன் அவர்களும் உரையாற்றினர்.

திராவிடர் கழகம்

சிட்னி, ஆஸ்திரேலியா சனிக்கிழமை (15.3.2025) சென்னையில் என்னோடு அன்பாக இனிமையாக உரிமையோடு பழகுகின்ற பெருமக்களுள் ஒருவர் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். மற்றவரான திராவிடர் கழகத்தின் போர்வாள் வழக்குரைஞர் அருள்மொழி. இருவரும் சிட்னி சென்றிருந்தார்கள்
என் அருமை மருகரும் என் அருமை மகளும் இருவரிடமும் சென்றனர். பாராட்டினர். பழைய நட்புகளைப் புதுப்பித்துக் கொண்டனர்.

–மறவன் புலவு க. சச்சிதானந்தம்

திராவிடர் கழகம்

ஆஸ்திரேலியாவில் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பாக திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மார்ச் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியா சிட்னியில் பன்னாட்டு மகளிர் தின கொண்டாட்டம். டாக்டர்
கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம். அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்.

– ஜான் நிவன், ஆஸ்திரேலியா

பெரியார்-அம்பேத்கர் சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தினம் 2025 விழாவில் தமிழ் நண்பர்களுடன் கலந்து கொண்டேன். சிறப்பு விருந் தினராக வந்திருந்த மதிப்பு மிக்க ஆசிரியர் மற்றும் சகோதரி அருள்மொழி இருவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் ஆற்றலும் எளிமையும் என்னை வியக்க வைத்தது. அவர்களின் உரையில் பெரியாரின் பெண்ணியத்தையும் மற்றும் சுயமரியாதையையும் காண முடிந்தது. இந்த அரிய நிகழ்வை ஒழுங்கு படுத்திய PATCA நண்பர்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்த்திய நன்றிகள்!

– திருஆறுமுகம்

ஆசிரியரைப் பாராட்டி பிரிஸ்பேனில்
ஓர் இளம் கருப்பு சட்டை பொறியாளர், கவிஞர் பாடிய கவிதை
பகுத்தறிவு கோட்டை!
பைந்தமிழால் வேட்டை!
கருத்துக்கள் சாட்டை!
கருப்புகள் சட்டை !
திராவிடர்கள் மிட்டாய் –
ஆசிரியர் நீங்கள்,
90கள் தொட்டாய்…
நேற்று முளைத்த காளான்கள்
வீட்டிலிருந்து செய்யும் அரசியலை
தீயாய் சுட்டாய்!
காளான் வீடு விட மாட்டாரு!
ஆசிரியர் 90களிலும் காட்டாறு!
அறியாமைகள் அஞ்சும்!
அறியா ஆமைகளும் அஞ்சும்!
எம்மில் அரியாசனம் கொண்ட
அரிமாவே…எங்கள் ஆசானே…
தாயகம் தாண்டியும் திராவிடர்கள் தழைக்க
தன்னலமற்ற தங்கள் வருகைக்கும்
வழிநடத்தலுக்கும் நன்றிகள் கோடி !!

– க. கார்த்திக்குமார்

Periyar Ambedkar Thoughts Circle Australia – PATCA 2025ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வில் (IWD25) கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஆசிரியர் வீரமணி அவர்களின் உரை மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கிய சுயமரியாதை மற்றும் மனித உரிமை இயக்கத்தின் தாக்கத்தை நினைவுபடுத்தியது.

இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் மரபுரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் (1989) நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பெருமைமிக்க சமூக மாற்றங்கள் பெரியார் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் விடாமுயற்சியும், தொலைநோக்குப் பார்வையும் இல்லையெனில் சாத்தியமாக முடியாது. சமூக நீதி, சமத்துவம், மனித நேயம் ஆகியவற்றின் அடையாளமாக “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற சங்க கால வாக்கியத்திற்கேற்ப தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்த முன்னேற்றம் இவர்களின் போராட்டத்திற்கும், தன்னலமற்ற statesmen-களின் தொலைநோக்கு பார்வைக்கும் ஒரு நினைவுச்சின்னமாகும்!

– வெங்கட் ஜெயராஜ், ஆஸ்திரேலியா

#IWD Take It – Don’t Wait for It!
Attending today’s International Women’s Day event by @periyar-in-australia reminded me why women shouldn’t wait for opportunities, respect or equality – we must take them.
I was born into a family where my opportunities were limited simply because I was a girl.
While my brother was sent to university, my parents refused to send me. Poverty was the excuse, but I know that if I had been a boy, they would have found a way.
I had to fight for everything. Even enrolling in a simple typewriting class was a battle.
My parents were happy to send me to a tailoring course because they saw it as “less masculine” but anything beyond that required relentless determination.
At 16, I worked 12 hour night shifts so I could fund my graphic design studies during the day.

– Priya Songappan

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *