திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் திராவிடர் கழக மேனாள் தலைவர் நாசி.பொன்னுரங்கம் அவர்களின் இணையர் இராதா பாயம்மாள் அவர்கள் நேற்று (16.3.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு பொன்.கணேசன், பொன்.சுந்தர், பொன்.வெங்கடேசன், பொன்.இரமேசு ஆகிய மகன்கள் உள்ளனர். அம்மையாரின் உடல் வடமணப்பாக்கம் பெரியார் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, இன்று (17.3.2025) திங்கள்கிழமை மாலை 3 மணியளவில் வடமணப்பாக்கம் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.