குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இதை தட்டிக்கழித்து, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கைவிடும் பெற்றோர், பாதுகாவலருக்கு குறைந்தது 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
7,783 அங்கன்வாடி பணியிடங்கள்:
அரசு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள், 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு +2, உதவியாளர் பணிக்கு 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 25-35க்குள் இருக்க வேண்டும்.
பட்டப்பகலில் பயங்கரம்: அதிர்ந்த உ.பி.
ஏதோ தீபாவளி துப்பாக்கியை வைத்து சுடுவது போல, உ.பி.யில் ஒருவரை கொலை செய்திருக்கிறது ஒரு கும்பல். அலிகரை சேர்ந்த ஹாரிஸ் (25) என்பவர், நோன்புக்கு முன்பான உணவை வாங்குவதற்காக, அதிகாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் ஹாரிஸை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். முன்விரோதத்தால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என காவல் துறை சந்தேகிக்கிறது.
மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை!
– ப.சிதம்பரம்
திருப்பத்தூர், மார்ச் 16- தமிழ்நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என மேனாள் ஒன்றிய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் பாராட்டினாா்.
திருப்பத்தூரில் நேற்று (15.3.2025) செய்தியாளா் களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 8 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. முதலீடுகள் செய்வது மட்டும் போதாது, திட்டங்களை நிறைவேற்றும் போது, அதன் தரத்தையும் தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும்.
ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் கல்விக்குதான் முதலிடம் தர வேண்டும் என நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தினேன். இதன் அடிப்படையில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ரூ.55, 210 கோடி ஒதுக்கப்பட்டது பாராட்டத்தக்கது.
கல்விக் கடன் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க வங்கி அதிகாரிகளை அழைத்து மாநில நிதி அமைச்சா் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
2000 ஏக்கரில் ‘குளோபல் சிட்டி’ போன்ற சென்னைக்கான திட்டங்களும், தொல்லியலுக்காக ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் வரவேற்புக்குரியது. மானாமதுரையில் அரசு கலைக் கல்லூரி திறக்கப்படும் என்ற அறிவிப்பும், அரசின் நிதிப் பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் என்பதும் பாராட்டுக்குரியது. மொத்தத்தில் இது தமிழ்நாடு மக்களுக்கு நலன் பயக்கும் நிதிநிலை அறிக்கை என்றாா் அவா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் விழிப்புணர்வு நூல் வெளியீடு
சென்னை, மார்ச் 16- புளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின் 60 ஆண்டுகளை ஆவணப்படுத்தும் வகையில் ‘மெமரீஸ் அண்ட் மைல்ஸ்டோன்ஸ்’ என்கிற ஆங்கில நூலில் மறக்க முடியாத தருணங்களை வரலாற்றாசிரியர் வி.சிறீராம் மற்றும் லஷ்மண் எழுதியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதியும் தேசியப் புலனாய்வு அமைப்பின் மேனாள் சிறப்பு அரசு வழக்குரைஞருமான நீதியரசர் பி.என்.பிரகாஷ் இந்த நூலை நேற்று (15.3.2025) வெளியிட்டார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் விலங்கு உரிமை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேனகா காந்தி மற்றும் தமிழ்நாடு அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல்
ஏ.எல்.சோமயாஜி ஆகியோரின் முன்னிலையில் இந்த நூல் வெளியிடப்பட்டது.