திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசுவின் மகன் சிற்றரசு – நினைவில் வாழும் தொழிற்சங்கத் தலைவர் வி.எம்.ஆர். சபாபதியின் பெயர்த்தி எழிலரசி ஆகியோரது மணவிழானை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளரும். நாடாளுமன்றக் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆ. இராசா. மு. சண்முகம், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். (சென்னை- 9.7.2023)