மகாராட்டிர மாநிலத் தில் பா.ஜ.க. கூட்டணி யில் உள்ள அமைச்சர் அனில் பாட்டில் அவரது சொந்த ஊரான அமல நேர் சென்றார். சாலை நெடுகில் பூக்களைத் தூவி அவரை வரவேற்க பள்ளிமாணவிகள் வர வழைக்கப்பட்டனர்.
துலே என்ற அருகில் உள்ள பெரிய நகரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் சொந்த ஊர் வர, 5 மணி நேரம் தாமதமானது. காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வெயிலில் பள்ளி மாணவிகள் சாலை ஓரம் அமரவைக்கப்பட்டனர். பல மாணவிகள் மயக்கம் போட்ட நிலையிலும், அவர்களுக்குத் தண்ணீர் குடிக்க கொடுத்து இருந்த இடத்திலேயே படுக்கவைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மகாராட்டிர மாநிலத்திலும் குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளது. டில்லியிலும் தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் உள்ளது. இந்த இரண்டு அமைப்புகளுமே குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற இந்தக் கொடுமைக்குக் காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் எதுவும் நடவடிக்கை எடுக்குமா? இவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு காண்கின்றனர்.