மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 13.03.2025 அன்று சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், 140ஆவது வார்டில், அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் உள்ள கோவிந்தன் சாலையில் ரூபாய் 5.10 கோடி. மதிப்பில் 4 தெருக்களுக்கு 1.54 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் சிறீதர் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.