சென்னை, மார்ச் 15 ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி பகுதியானது பூநாரை பறவைகள் சரணாலயமாக மாற்றப்படுகிறது.
பல்லுயிர் பெருக்கத்தை உறுதிசெய்யும் வகையில் வேட்டை பறவைகளின் வாழிடங்களைப் பாதுகாக்க ‘வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு’ ரூ.1 கோடியில் உருவாக்கப்படும். பூநாரை உள்ளிட்ட வலசைப் பறவைகள் இடம்பெயர்வதற்கான மத்திய ஆசிய பறக்கும் பாதையின் முக்கியப் பகுதியாக கருதப்படும் ராமேசுவரம் – தனுஷ்கோடி பகுதியை, பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியில் வனச் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் வகையில், 1,000 ஹெக்டேர் பரப்பில் ரூ.10 கோடியில் பல்லுயிர் பூங்கா நிறுவப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூநாரை பறவைகள் சரணாலயமாக மாறும் தனுஷ்கோடி
Leave a Comment