‘எல்லோர்க்கும் எல்லாம்’ நிதி நிலை அறிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

Viduthalai
4 Min Read

சென்னை, மார்ச் 15 தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-2026) நிதி நிலை அறிக்கையை சட்டப் பேரவை யில் நேற்று (14.3.2025) நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

மு.க. ஸ்டாலின்

‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிதி நிலை அறிக்கைக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
திமுக துணை பொதுச் செய லாளர் கனிமொழி எம்.பி.:
தமிழ்நாடு பட்ஜெட்டில் பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்வை. தமிழ் மொழி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
“எல்லோருக்கும் எல்லாம்” எனும் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதாக பட்ெஜட் அமைந்திருப்பது பாராட் டுக்குரியதாகும். தமிழ்நாடு வெற்றி நடைபோட நிதிநிலை அறிக்கை பாதை அமைத்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
தமிழ்நாடு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை:
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய வரிப் பகிர்வை தர மறுத்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் திறமையாக கையாண்டு ஒரு நல்ல நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கண்டுக்கொள்ளவில்லை என்றாலும், படகுகளை பறிமுதல் செய்தால் அதற்கான உரிய நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்க தகுந்த அம்சங்களாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோதப் போக்கு காரணமாக பகிரங்கமாக மும்மொழி கொள்கையை ஏற் றுக் கொள்ளாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்ற பல் வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிற இக்கட்டான சூழலில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிற வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கிற முயற்சிகள் தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

தலை நிமிர வைக்கும்

இதன்மூலம் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:
இரு மொழிக் கொள்கையில் உறுதி காட்டி வருவதும், வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பதும் பாராட்டத்தக்கது. ஒப்பந்தப் பணியாளர்களுக்கு அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் மின் கட்டணத்தில் சலுகை கோரி வருவதையும், நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதையும் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு
சட்டப்பேரவை விசிக தலைவர் சிந்தனைச் செல்வன்: நிதி நெருக்கடி, பேரிடர்கள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தி ருக்கிறது. விளிம்புநிலை மக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதும், சமூக நலன், மகளிர் மேம்பாட்டுக்காக திட்டங்களை அறிவித்துள்ளதும் பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு

த.வா.க. தலைவர் தி.வேல் முருகன்: தமிழ் மொழி, மக்களின் மேம்பாட்டுக்கான நிறைய அறிவிப்புகள் இடம் பெற் றுள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு. ஈழத் தமிழர் சகோதரர்களுக்கு இரட்டை குடியுரிமை ஆகிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்:
நடப்பு நிதியாண்டில் அய்ந்து லட்சம் மனைப்பட்டாக்கள் வழங்கப்படும் எனும் அறிவிப்பும், நகர்ப்புற வீடு கட்டும் திட்டத் திற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும், உள்கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தியிருப்பதும் நல்ல அம்சம். நிதி நிலை மீதான விவாதத்திற்கு பிறகேனும் விடுபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாடு
மதுரை எம்பி சு.வெங்கடேசன்:
மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, மதுரையை பண்பாடு, தொழில் வளர்ச்சி, அடிக்கட்டமைப்பு மேம்பாடு, அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் நலன் என்கிற அய்ந்து மய்ய அச்சுகளையும் இணைத்து சிந்தித்த 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வைகை நதிக்கரை மேம்பாடு, மாநகராட்சி சாலைகள் மேம்பாடு, தொழில் வளர்ச்சி மூலான வேலைவாய்ப்புகள், அகர மொழிகளின் அருங்காட்சியகம், பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என மதுரைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இத்தகைய தனித்துவமான, அவசியமான மதுரைக்கான 17 திட்டங்களை அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *