அன்னை மணியம்மையார் 47ஆவது நினைவு நாள் (16.3.2025) 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 05-00 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர் ) *பொருள்: கிளை கழகங்கள் அமைத்தல், விடுதலை சந்தாக்கள் தீவிரப்படுத்தல், மாவட்ட கழக வளர்ச்சி, பிரச்சார திட்டங்கள் *குறிப்பு: அன்னை மணியம்மையார் நினைவு நாளை முன்னிட்டு காலை 08-00 மணிக்கு ஆவடி பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் படம் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் * ஆவடி மாவட்ட கழக அனைத்து அணிகளின் தோழர்களும் தவறாமல் நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)
அன்னை மணியம்மையார்
நினைவு நாள் – காஞ்சிபுரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: மாலை 5.00 மணி *இடம்: கீரை மண்டபம், காப்பாளர் ச. வேலாயுதம் இல்லம், காஞ்சிபுரம் * தலைமை: அ.வெ. முரளி ( மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: வி. கோவிந்தராஜி (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (மாவட்ட காப்பாளர்), ச.வேலாயுதம் (மாவட்ட காப்பாளர்) * நோக்கவுரை: வி. பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாகை நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் காஞ்சி பா. கதிரவன் ( மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு. அருண்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்: இளைஞர் அணி வளர்ச்சிப் பணிகள், பொதுக்குழு தீர்மானங்கள் செயலாக்கம், தந்தை பெரியார் சிலைக்கு படிஅமைத்தல் மற்றும் கழக ஆக்கப்பணிகள் * நன்றியுரை: இரா.மோ. திராவிடச் செழியன் (மாவட்ட மாணவர் கழகம்).
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள் – மரியாதை
கன்னியாகுமரி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில், கன்னியாகுமரி *தலைமை: மா.மு. சுப்பிரமணியம் மாவட்டத் தலைவர்* முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் செயலாளர் மற்றும் தோழர்கள் *அன்னையார் படத்திற்கு குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப் படும். குமரி மாவட்ட கழகம் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதிக்கழக, கிளைக்கழக தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம். * குமரி மாவட்ட திராவிடர் கழகம்.
மதுரையில் அன்னை
ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவேந்தல்
16-03-2025 அன்று காலை 10-30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் போட்டுத்தந்தபாதையில் எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் இயக்கத்தை வழிநடத்திச் சென்ற தொண்டறத்தாய் அன்னை ஈவெரா. மணியம்மையாரின் நினைவேந்தல் நடைபெற இருக்கிறது. கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * வருகை விழையும்: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்).
தருமபுரி
அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி காலை 09.30 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், அன்னை மணியம்மையார் படத்திற்கு மலர்மாலை வைத்தும் மரியாதை செலுத்தப்படும். எனவே தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * இவண்: மாவட்ட திராவிடர் கழகம் -தருமபுரி.
மேட்டுப்பாளையம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: மாவட்ட கழக துணை செயலாளர் நாராயணன் இல்லம், குட்டைப்புதூர், காரமடை ஒன்றியம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்), கா.சு. அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்) *திராவிடர் கழக தோழர்கள், கழக இளைஞரணி, மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம். *இவண்: மாவட்ட திராவிடர் கழகம், மேட்டுப்பாளையம்.
சிதம்பரம்
அன்னை மணியம்மையாரின் நினைவு நாளை யொட்டி 16.3.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு சிதம்பரம் தந்தை பெரியார் படிப்பகத்தில், அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்படும். * கோவி.சுந்தரமூர்த்தி (செயலாளர்).
17.03.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் -1031
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை-7 * பொருள்: திருக்குறள் தொடர் சொற்பொழிவு 82 *வரவேற்புரை : மு.ரா. மாணிக்கம் (பொருளாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *உரைவீச்சு: எழுத்தாளர் கோ.பிச்சைவள்ளிநாயகம் (துணைத் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *அதிகாரம்: “தீ நட்பு” * நன்றியுரை : இராவணன் மல்லிகா (துணைச்செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்).