சென்னை, மார்ச் 14 தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (14.3.2025) தாக்கல் செய்யப்பட்ட சூழ்நிலையில், பட்ஜெட்டுக்கான இலச்சி னையைமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.3.2025) அறிமுகம் செய்தார். அதில் ரூபாயைக் குறிக்கும் தேவநாகரி எழுத்தான ₹ என்ப தற்கு பதிலாக தமிழ் எழுத்தான ‘ரூ’ என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது.
₹க்கு ஒரு வரலாறு உள்ளது. இந்திய அரசின் ரூபாய்க்கான ஒற்றை குறியீட்டை கண்டறிய தேசிய அளவில் ஒன்றிய அரசு போட்டியை நடத்தியது. அதில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் வடிவமைப்பாளர் டி.உதயகுமார், ₹ என்ற எழுத்தை வடிவ மைத்து அனுப்பினார். அதை தேவநாகரி எழுத்தையும் லத்தீன் எழுத்தையும் இணைத்து உருவாக்கியதாக கூறப்படுகிறது. ஹிந்தி மொழியை எதி ரொலிப்பது போல் இது அமைந்துள்ளது.
இந்த எழுத்தை ஒன்றிய அரசு தேர்வு செய்து கடந்த 15.7.2010 அன்று அறிமுகம் செய்தது. அந்த குறியீட்டை வடிவமைத்த உதயகுமாரை அழைத்து, அப்போதிருந்த முதலமைச்சர் கலைஞர் வாழ்த்தினார். தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சியிலும் இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2024-2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இலச்சினையில் ₹ பயன்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையேதான் மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டது. இது கடுமையான அரசியல் மோதல்களுக்கு வழிவகுத்து உள்ளது.
இந்த நிலையில்தான் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தூக்கப்பட்டு, முன்பு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் எழுத்து ‘ரூ’ பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அதிரடி மாற்றமும் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத்துணைத்தலைவர் ஜெயரஞ்சன் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் ரூபாய் சின்னம் தேவநாகரி எழுத்து என்பதால் அது தவிர்க்கப்பட்டு தமிழில் ரூபாய் என்று அழகாக வடிவ மைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
இதற்கிடையே தி.மு.க. தரப்பில் வெளியிடப்பட்ட சமூகவலைதள கருத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘இந்திய ரூபாய் குறியீடு ₹-க்கு, பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தியது-தாய் மொழியை போற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர்’ தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று (14.3.2025) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ்’ வலைதள பக்கத்தில், தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில், இந்தியா ரூபாயின் குறியீடு ‘₹’ பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது. நமது ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள 15 அலுவலக மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதலமைச்சர் உபயோகித்து உள்ளார். இது, தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது. இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.