காவேரிப்பட்டணம், மார்ச் 14- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்காங்கிரஸ் மேனாள் மாவட்ட தலைவரும் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன்-சாந்தி ஆகியோரின் இல்ல திருமண வரவேற்பு விழா காவேரிப்பட்டணம் கே.ஆர்.வி. திருமண மகாலில் 12/03/2025இல் நடைப் பெற்றது,
மருத்துவர் சு.சோனியா-மரு.சரவண நாதன் ஆகியோருக்கு 9/03/2025 அன்று புதுக்கோட்டையில் நடந்த மணவிழாவில் மேனாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த் தினார்.
மணவிழா வரவேற்பிற்கு வந்திருந்த கே.வி. தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணுபிரசாத், ஓசூர் கே.கோபிநாத் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, கிருட்டினகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தே.மதியழகன் எம்.எல்.ஏ., அதிமுக மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் கே.ஏ.மனோகரன், காவேரிப்பட்டணம் அதிமுக. டாக்டர் கோ.சமரசம், பா.ம.க. த.அ.மேகநாதன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தருமபுரி தீர்த்தராமன், கிருட்டினகிரி எம்.வி. வெற்றிச்செல்வன், வாழப்பாடிஇராம. வசந்தன்,மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் த.அ.நாகராஜ், தேங்காய் சி.சுப்பிரமணி, க.மகேந்திரன்,.வி.எஸ்.சீனிவாசன், அம்சவேணி செந்தில்குமார், பையூர் இரவி,விமல், கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்டத் துணைத்தலைவர் தி.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனி வாசன், இல. ஆறுமுகம், பெ.செல்வம், பெ.செல்வேந்திரன், அ.கோ.இராசா, பூ. இராசேந்திரபாபு, சி. இராசா, சி.கனியமுதன், பெ.சசிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்விணையர்களை வாழ்த்தினர்.
கிருட்டினகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகராட்சி தலைவர் தியாகராஜன் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட துனைத் தலைவர் பி .சி .சேகர், ஏகப்பவாணன், ஜெகதேவி உமர், ராஜகுமாரவேல், நாராயண மூர்த்தி, நாச்சில் ஜேசுதுரை, ரகமத்துல்லா, கோவிந்தசாமி, ஊற்றங்கரை ஆறுமுகம், திம்மப்பா,முத்து, சண்முகம், வின்செண்ட், இருதயம், இராதாகிருஷ்ணன், ஆறுமுகம், ராமசந்திரன், கல்லாவி ரவி, தனஞ்செயன், கவுன்சிலர்விநாயகம், ரமேஷ் அர்னால்டு, சரவணன், செல்வராஜ், டேம் ரமேஷ், நாச்சிகுப்பம் முன்ராஜ் கருணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள்கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.