இரா.முத்தரசன் வலியுறுத்தல்
விருதுநகர், மார்ச் 14 மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பி.க்களை அவதூறாகப் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்
விருதுநகரில் செய்தியா ளா்களிடம் அவா் கூறிய தாவது:
பதவி நீக்கம்
தேசிய கல்விக் கொள் கையானது ஆா்எஸ்எஸ் மனுதா்மத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் தொடா்ந்து இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையான மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசுக்கு நிதி தர முடியாது எனக் கூறி, ஒன்றிய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் முதலில் அரசியலாக்கினார்
தமிழ்நாடு மக்களவை உறுப்பினா்களை அவமரியாதையாகப் பேசி விட்டு, பிறகு தா்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேட்பது அவா் வகிக் கும் பதவிக்கு தகுதி இல் லாதவா் என்பதையே காட்டுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் அவா் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கை-மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டதாக ஒன்றிய கல்வி அமைச்சா் உண்மைக்கு புறம்பான பொய்த் தகவலைத் தெரிவித்தார். தலைமைச் செயலா் எழுதியுள்ள கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து குழு அமைக்கப் பட்டதாகவும், அந்தக் குழு பரிந்துரைத்த பிறகு கருத்துகளை அனுப் புவதாகவும் தெரிவிக்கப் பட்டதே தவிர அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மொழியை திணிக்கக் கூடாது
தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதிய கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கை-மும்மொழிக் கல்வித் திட்டத்தை அமல்படுத்த இயலாது எனக் குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை மக்க ளவையில் தெரிவிக்காத ஒன்றிய கல்வி அமைச்சா், தலைமைச் செயலா் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை கூறிவிட்டு, மற்றொரு பகுதியைச் சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.
தமிழ்நாட்டில் ஹிந்தியை விரும்பி கற்ப வா்களைத் தடுக்கவில்லை, அந்த மொழியைத் திணிக் கக் கூடாது என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வித் தொகை ரூ. 2 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை-மும்மொழிக் கல்வித் திட்டத்தை ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அரசை நிர்பந்திப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். ஒட்டுமொத்தமாக ஒரு மாநிலத்தைப் புறக் கணிக்கக் கூடிய ஒன்றிய அரசின் எதேச்சதி காரப் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக் கிறது. இதற்கான எதிர் விளைவுகளை ஒன்றிய பாஜக அரசு சந்திக்க நேரிடும். இவ்வாறு இரா. முத்தரசன் செய்தியா ளர்களிடம் கூறினார்.