சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் தொடர்பாக முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:
* மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்
*ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம்
*இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில் நுட்பம்
*தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்
*புதிய நகரம்
*புதிய விமான நிலையம்
*புதிய நீர்த்தேக்கம்
*அதிவேக ரயில் சேவை
என நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சி கள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமான வரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன!
‘எல்லோர்க்கும் எல்லாம்’ எனும் உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழ்நாடு பட்ஜெட் 2025!
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Leave a Comment