கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

10.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉பொது சிவில் சட்டத்திற்கு சமூகத்தின் பல தரப்பினரும் எதிர்ப்பு.

👉 மணிப்பூரில் வன்முறை நிகழ்த்தும் மெய்திஸ், குக்கி சமூக மக்கள், எதிர்தரப்பினரை அடையாளம் காண டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉ஆளுநராக பதவி வகிக்கத் தகுதி இல்லாதவர் ஆர்.என்.ரவி. தமிழ்நாட்டிற்கும், மொழிக்கும், பண்பாட் டிற்கும் எதிராக செயல்படுகிறார், குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான கடிதம்.

👉 தொகுதி வரை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் 11 எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத் திற்கு மனு. வேறெந்த மாநிலத்திலும் நிகழாமல் இங்கு மட்டும் ஏன் மோடி அரசு இதை செய்கிறது என குற்றச்சாட்டு.

தி இந்து:

👉ஓபிசி பட்டியலில் அதிக ஜாதிகளை சேர்க்க, சமூக பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து கேரளா முடிவு.

👉 அக்னிபாத் திட்டத்தில் சேர்ந்த பயிற்சியாளர்கள் பாதியிலேயே விட்டுவிடுவதாக தகவல். இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அரசு வீணடித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி மோடி அரசை கடுமையாக சாடியுள்ளது

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி தலைமை ஆதரவளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநில ஆம் ஆத்மி பழங்குடியின தலைவர் பதவி விலகல்.

👉மோடி அரசின் நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அறிவிப்பு.

தி டெலிகிராப்:

👉 மோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராம மக்கள், யோகி அரசால் இடிக்கப்படும் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான காந்திய கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக போர்க்கொடி.

👉 சமீபத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் சில அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஒரு மாநிலம் ஒன்றிய அரசின் நிதியைப் பெற விரும்பினால், அந்த பள்ளிகளின் பெயர்களுக்கு பி.எம்.சிறீ (றிவி-ஷிபிஸிமி) என்ற பெயரை பள்ளியின் பெயருக்கு முன்னால் போட வேண்டும் என மோடி அரசு கட்டளை.

👉 நாட்டை வீழ்த்துபவர்கள் பாஜகவில் சேர வேண்டும் அல்லது சிறைக்கு செல்ல வேண்டும் என்று பேரரசர் (மோடி) செய்தி அனுப்பியுள்ளார்.  ஊழலில் பிரதமர் மோடி இரட்டை வேடம் போடுவதாக உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்.

👉ஒடிசா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம், ஓபிசி குடும்பங்களின் கல்வி, தொழில் மற்றும் குடும்பத் தரவுகளை பதிவு செய்யும் கணக் கெடுப்பை நிறைவு செய்துள்ளது. மத்திய பிரதேசம், மகாராட்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களை அடுத்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக் கெடுப்பை முடித்த நான்காவது மாநிலமாக ஒடிசா திகழ்கிறது.

👉 வடகிழக்கு மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யுசிசி) உடனடியாக அமல்படுத்துவதை எதிர்க்க அருணாச்சல பிரதேசத்தில் பாஜக கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) அருணாச் சல பிரதேச பிரிவு முடிவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 ம.பியில், தாழ்த்தப்பட்டவர் மீது சிறுநீர் கழித்த பார்ப்பனர் வீட்டை அரசு இடித்துள்ளது. வீட்டை மீண்டும் கட்ட பார்ப்பன சங்கம் நிதி சேகரிப்பு.

👉ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு செய்துள்ள துணை வேந்தரை எதிர்த்து சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக சங்கம் ஆளுநருக்கு கடிதம். 

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *