தினம் புருஷனுடன் வாழ்ந்து கொண்டு, புருஷன் என்பதாகத் தனக்கு ஒரு எஜமான் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு அடிமைத்தனத்தில் இருந்து குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இருக்கும் மாங்கல்யப் பெண்களின் போக உணர்ச்சியைவிட -_ மேற்கண்ட கவலையில்லாத விதவைப் பெண்களின் உணர்ச்சி எத்தனை மடங்கு அதிகமாயிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்! ஒரு ஜீவனைப் பட்டினி போட்டுக் கொல்வதிலும் ஒரு பெண்ணை விதவையாக வைத்துச் சாகாமல் காப்பாற் றுவது கொடுமை அன்றோ என்பதை யோசித்துப் பாருங்கள்!
(‘குடிஅரசு’ 27.10.1929)