திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜடாப் லால் நாத், தனது கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். இது சட்டமன்ற நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பின் போது தெரியவந்தது இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கமளித்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் ஜடாப் லால் நாத், தனது அலைபேசியில் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்து கொண்டிருந்ததால் அதை எடுத்துப் பார்த்ததாகவும், அப்போது அதில் ஆபாச படங்கள் ஓடத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். இதனிடையே ஜடாப் லால் நாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வந்தது. ஆனால், யாராவது புகார் கொடுத்தால் தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என அவைத்தலைவர் விஸ்வபந்து சென் கூறினார். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அலைபேசியில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அவைத் தலைவர், பல்வேறு முக்கிய பிரச்சினைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார். இதையடுத்து, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 5 சட்டமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத் தில் ஆபாசப்படம் பார்ப்பது ஒன்றும் புதிதல்ல, கருநாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்த போது பட்ஜெட் கூட்டத் தொடரில் கடுமையான விவாதம் நடந்துகொண்டு இருந்தது, அப்போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் எதையோ ரசித்துப் பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்ட ஊடகவியலாளர் அதைப் பதிவு செய்து பார்த்த போது அந்த அமளியிலும் அவர் ஆபாசப்படத்தை அலை பேசியில் பார்த்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது, இது நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் சிக்கலுக்கு ஆளானார், ஆபாசப்படம் பார்த்த பாஜக உறுப்பினர் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் கோவாவிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசப்படம் பார்த்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த போது ஏதோ ஒன்று ஓடுகிறதே என்று பார்த்தேன். பிறகுதான் அது ஆபாசப்படம் என்று தெரிய வந்தது என்றார். மத்தியப்பிரதேசத்திலும் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மிகவும் நெருக்கமான சட்டமன்ற உறுப்பினர் பேரவைக் கூட்டத்தின் போது ஆபாசப் படம் பார்த்தார்.
இந்த மூன்று நிகழ்வுகளிலும் தொடர்புடைய பாஜக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அவைத் தலைவரோ முதலமைச்சர்களோ எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே தான் திரிபுரா சட்டமன்றத்திலும் நடந்துள்ளது. பேரவைக் கூட்டத்தின் போது ஆபாசப்படம் பார்ப்பதை பாஜகவினர் ஒரு பாரம்பரியமாகவே தெற்கு முதல் மேற்கு மற்றும் வடகிழக்கு என இந்தியா முழுமைக்கும் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஒழுக்க நெறி பற்றியும் தார்மீகப் பண்பு பற்றியும் இந்தப் பா.ஜ.க.வினர் வாயில் தேனொழுகப் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் நடவடிக்கையோ அவற்றுக்கெல்லாம் நேர்மாறானது.
கோகுலத்தில் கிருஷ்ணன் செய்யும் லீலைகள் அடங்கிய படத்தை முன்பெல்லாம் வீட்டில் மாட்டி வைத்திருப்பது உண்டு.
தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் காரணமாக அந்தப் படங்களை இப்பொழுதெல்லாம் பார்க்க முடியவில்லை.
ஆனால், பா.ஜ.க. பிரமுகர்களோ சட்டப் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போதே கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்து ரொம்பவும் தான் இரசிக்கின்றனர்!
வெட்கக் கேடே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா?சட்டமன்றமா?
ஆபாசப் படம் பார்க்கும் கூடமா?

வெட்கக் கேடே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா?