தந்தை பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேச்சு!

Viduthalai
2 Min Read

கனிமொழி எம்.பி. பதிலடி

புதுடில்லி, மார்ச் 13 மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக ஆளும் திமுக அரசுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

பதில்

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேற்று (12.3.2025), நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியா ளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பெரியார் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய கருத்துக்கு விரிவான பதில் அளித்துள்ளார்.
கனிமொழி தனது பேட்டியில் கூறிய விவரம் பின்வருமாறு:
‘‘பெரியார் தமிழ் மொழியை ‘காட்டு மிராண்டி மொழி’ என்று குறிப்பிட்டதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தற்போது, ‘‘ஓர் அமைச்சர்’’ உங்களைப் பார்த்து காட்டுமிராண்டி என்று சொல்லும்போது அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள்.

அக்கறை

ஒரு தந்தை, தன் மகனைப் பார்த்து அக்கறையோடும், ஆதங்கத்தோடும், நீ மேலும் நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காக கோபத்தில் சொல்வதற்கும், ஊர்ப் பெயர் தெரியாத ஒருவர் அந்த குழந்தையைப் பார்த்து தரக் குறைவாக பேசுவதற்கும் வித்தி யாசம் இருக்கிறது.

பழம்பெருமை

பெரியார் எதற்காக சொன்னார் என்பதை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புரிந்துகொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பரவிக் கொண்டி ருக்கிற புதிய விடயங்களை, அறிவியல் சார்ந்த விஷயங்களை, தமிழ் மொழி வழியாக மக்களுக்கு கொண்டு சேர வேண்டும் என்பதற்காக அந்த காலத்திலேயே பழம்பெருமை பேசிக் கொண்டு இருக்காதீர்கள். புதிய விஷ யங்களை தமிழில் கொண்டு வாருங்கள் என்று பெரியார் சொல்லிய கருத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்.

பாரதிமீது ஏன் கோபப்படவில்லை?

மேலும், அவர்களுக்குப் புரிகின்ற மொழியில் சொல்லவேண்டும் என்றால், பாரதியார் ‘‘மெல்லத் தமிழினிச் சாகும்’’ என்றார். இதற்குக் கோபப்படாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெரியார் சொன்னதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். உண்மையில் பெரியார் சொன்னது அக்கறையோடுதானே தவிர, எங்களை அவமானப்படுத்தவோ, அசிங்கப்படுத்தவோ இல்லை.

வித்தியாசம்!
பெரியார் எங்களுக்குத் தந்தை. அவர் பேசுவதற்கும், இன்னொரு மாநிலத்தில் இருக்கக்கூடிய ஓர் அமைச்சர், தமிழர்களைப் பார்த்து காட்டுமிராண்டிகள் என்று பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவமானம் படுத்துவதற்கும், அக்கறைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *