ஹிந்து மதம் அழிந்தால் என்ன?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்
(12.7.2023 நாளிட்ட துக்ளக்கில், திருவாளர் குருமூர்த்தி அய்யர் எழுதிய கேள்வி பதில்களுக்கு சவுக்கடி இங்கே!)
துக்ளக்குக்குப் பதிலடி
கேள்வி: பெண்களுக்கு வீடுதான் உலகம் என்றி ருந்த காலம் பொற்காலம் இனி வருமா? வரவே வராதா?
பதில்: அதைப் பொற்காலம் என்று பெண்கள் நினைக்கும்போது மட்டுமே அந்தப் பொற்காலம் திரும்பவரும்.
நமது பதிலடி: பெண்களுக்கு வீடுதான் உலகம் என்பது பொற்காலம் அல்ல – அது கற்காலம்.
அக்கிரகாரப் பெண்மணிகள் படித்துவிட்டு வேலை பார்க்கிறார்களே – நாலு காசு சம்பாதிக்கிறார்களே அது என்ன காலம்?
கணவனை இழந்த அக்கிரகாரப் பெண்களை மொட்டை அடித்து மூலையில் முடங்க வைத்தார்களே – அது இப்பொழுது இல்லை என்றால் அது என்ன காலம்? இறந்த காலம் தானே!
இக்காலத்தில் 30 சதவீதம் பெண்கள்தான் பெண்மை உள்ளவர்கள் என்று பேசப் போய் ‘துக்ளக்‘ குருமூர்த்தி வாங்கிக் கட்டிக் கொண்டும் புத்தி வரவில்லையே!
கேள்வி: ஈகோவை விரட்ட என்ன வழி?
பதில்: இருப்பது போதும் என்று நினைத்து, தன்னடக்கத்துடன் இருந்தால், ஈகோவை விரட்ட வேண்டிய அவசியம் இருக்காது. அதுவே போகும் இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார் காஞ்சி மஹாஸ்வாமி.
நமது பதிலடி: அப்படியா? காஞ்சி மடத்துக்கும் திருப்பதி கோயிலுக்கும் கோடிக்கோடியாக பணமும் தங்கமும் குவிகிறதே – இது யாருடைய ஈகோ?
கேள்வி: அதிக பலன் தருவது தியானமா, நிதானமா?
பதில்: தியானம் இல்லை என்றால் நிதானம் வராது.
நமது பதிலடி: தானம் வாங்கிப் பிழைப்பது – அதாவது பிச்சை எடுப்பதுதான் (யாசகம் புருஷ லட்சணம்) பார்ப்பனத் தொழில் என்று சாத்திரம் கூறுகிறதே, அது என்ன ஞானம்?
பிறப்பால் சூத்திரர்கள் என்றும், அதன் பொருள் வேசி மகன் உள்ளிட்ட ஏழு பொருள் கொண்டது என்றும் மனுதர்மம் கூறுகிறதே – அது நிதானத்தால் வந்த நிதானமான பேச்சா?
கேள்வி: யாரையும் நோகடிக்காமல் வாழ்வது எப்படி?
1 நமக்கு என்ன செய்யக் கூடாது என்று நினைக்கி றோமோ அதை நாம் பிறருக்குச் செய்யக் கூடாது. பிறர் நமக்கு என்ன நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் பிறருக்குச் செய்ய வேண்டும். இதை நம் சான்றோர்கள் தர்மம் என் கிறார்கள். எளிமையான இந்த விதியைக் கடைப்பிடித் தால், யாரையும் நோகடிக்காமல் வாழ முடியும். விதி எளிதுதான். கடைப்பிடிப்பதுதான் கடினம்.
நமது பதிலடி: இதை எந்த சான்றோரும் சொல்ல வில்லை; தந்தை பெரியார்தான் சொன்னார்.
“மற்றவர்களிடமிருந்து நாம் எதைப் பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருது கிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டும்.அது தான் ஒழுக்கம். (‘விடுதலை’ 7.2.1961)
இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார். துக்ளக் குருமூர்த்தி கூறும் மனுதர்மமும் கீதையும் ஒரு குலத் துக்கொரு நீதி சொல்லுவது.
செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும் பலாத்காரத்தாலும் கொள்ளையிடலாம். (மனு அத்தியாயம் 11 சுலோகம் 18)
இதுதான் குருமூர்த்தி கூறும் ஆன்றோர் சான்றோர் வழக்கோ!
கேள்வி: இந்த முறை நீட் தேர்வு முடிவுக்குப் பிறகு யாரும் தற்கொலை செய்யவில்லை என்றால் நீட் தேர்வுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி அல்லவா?
துக்ளக் பதில்: அது நீட் தேர்வுக்கு வெற்றியோ இல்லையோ. அடுத்த ஆண்டும் நீட் தேர்வால் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றால் நீட் எதிர்ப்பு தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்டாலும் ஆச்சரியம் வேண்டாம்.
நமது பதிலடி: நீட் தேர்வு தொடங்கப்பட்ட காலகட்டத்திலும், அதனைத் தொடர்ந்தும் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களே அதன் பொருள் ‘நீட்’ தேர்வு தோல்வி என்று இந்தக் கூட்டம் ஏன் சொல்லவில்லை?
இவ்வாண்டு நீட் தேர்வில் முதல் 50 ரேங்கில் வெற்றி பெற்றவர்களில் 38 பேர்கள் பல லட்ச ரூபாய் செலவு செய்து கோச்சிங் கிளாஸ் போனவர்களே – அந்த அளவுக்குச் செலவு செய்ய எல்லோராலும் முடியுமா?
நீட்டால் வெற்றி பெற்றவர்கள்கூட எத்தனையாவது தடவை நீட் எழுதி வெற்றி பெற்றவர்கள் என்பதையும் விளக்கினால் பிரயோசனமாக இருக்குமே!
இவ்வாண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் எல்லாம் நடந்திருக்கிறதே – என்ன பதில்?
கேள்வி: இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஹிந்துக்களைவிட மக்கள் தொகையில் இஸ்லாமி யர்கள் அதிகமாகி விடுவர் என்ற கணக்கீடு நிஜமாகி விட்டால்…?
துக்ளக் பதில்: பிறகு பாரதம் ஹிந்து வகுப்புவாதம் மட்டுமல்லாமல், ஏன் ஹிந்துக்களே இல்லாத நாடாகி, இறுதியாகப் பாகிஸ்தானைப் போலவே ஆகிவிடும். சுதந்திரத்துக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது அங்கு இல்லாதது போல், இங்கும் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இருக்காது. திராவிடம், தமிழ் என்ற வார்த்தைகளே அரசியலில் இருக்காது. பாகிஸ்தானில் இஸ்லாமே இருப்பதுபோல் இங்கும் இஸ்லாம் மட்டுமே இருக்கும்.
நமது பதிலடி: மதம் என்பது தனிப்பட்டவர்களின் பிரச்சினை. எந்தமதம் வளர்ந்தால் என்ன, வளரா விட்டால் என்ன?
துக்ளக்கின் கவலை எல்லாம் பிறப்பால் பிராம ணனான நமக்குள்ள ஆதிக்கமும் தனி உரிமைகளும் பறி போய் விடுமே என்ற பயந்தான்!
இஸ்லாம், கிருத்துவம் எண்ணிக்கையில் அதி கரிப்பது பற்றிக் கவலைப்படும் ஹிந்து துக்ளக் கூட்டம், ஹிந்து மதத்தின் பெரும்பாலான மக்களை ஜாதியால் பிரித்து வைக்கப்பட்டுள்ளதை தீண்டாமை கடைப் பிடிக்கப்படுவதை – ஹிந்துக் கோயில்களில ஹிந்துவாக இருப்பவன் ஒருவன் ஆகமம் படித்தாலும் அர்ச்சகர் ஆக முடியாது என்பதையெல்லாம் இன்றுவரை அடம் பிடிப்பது ஏன்? உச்சிக்குடுமி மன்றம் செல்லுவது ஏன்?
இந்த வகையில் ஹிந்து மதம் அழிந்தால் மகா மகா சந்தோஷம்தானே!
மதம் மாறலாம் – ஹிந்து மதத்தில் ஜாதி மாற முடியுமா – சொல் துக்ளக்கே!
கேள்வி: தமிழ்நாடு புனிதமானது – பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி பிறந்ததாலா?
துக்ளக் பதில்: தமிழகத்தில் புனித பாரம்பரியத்தை யும், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் முதலா னோரின் புனித நூல்களையும் கேவலப்படுத்திய அவர் களெல்லாம் பிறந்தும் கூட, தமிழகம் புனிதமாக இருப்ப தற்கு முழுக் காரணம் – தமிழக மக்கள் அவர்கள் வணங்கும் தெய்வங்கள், கோவில்கள். வாழையடி வாழையாகத் தோன்றித் தொடரும் ஆன்மிகப் பெரியோர்கள்.
நமது பதிலடி: குருமூர்த்தியார் கூறும் அந்த ஆன் மிகப் பெரியோர்களில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் அடங்குவாரா?
எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்த ஒழுக்கசீலர் தானே அவர்!
உங்கள் கடவுளர்களின் யோக்கியதைதான் என்ன?
பிறரை நோகடிக்காத செயலோ?
குளிக்கப் போன பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு நிர்வாணமாக வந்தால்தான் ஆடைகளைக் கொடுப் பேன் என்ற காமக் கொடூரன்தானே உங்கள் கடவுள்!
புராணத்தைப் பற்றி புளகாங்கிதம் அடைகிறாரே பூணூலார்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டை எடுத்துச் சொன்னால் மூஞ்சியை எங்கே கொண்டு வைத்துக்கொள்வார்?
அன்னையைப் புணர்ந்து தாதை
குரவனாம் அந்தணாளன்
தன்னையும் கொன்ற பாவம்
தணிந்து வீடளித்த தென்றால்
பின்னை நீவிழி நோய் குட்டம்
பெரு வயி றீளை வெப்பென்று
இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம்
என்பதோ இதற்கு மேன்மை.
(திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர், மாபாதகம் தீர்த்த படலம்)
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கே மோட்சத்தை இந்தக் கோயில் தீர்த்தம் (மதுரை) அளித்தது என்றால், மற்ற மற்ற நோய்களைத் தீர்த்தது என்பது பிரமாதமா என்று கொஞ்சம் கூடக் கூச்சநாச்சமின்றி, நல்ல ரத்தமின்றி, வெட்கமின்றி புனித நூல்கள் என்று பூமாலை சூட்டுகிறார்களே, இந்தக் கூட்டத்தை என்ன சொல்ல!
12 ஆண்டுகள் பாவம் செய்து கும்பகோணம் மகா மகக் குளத்தில் மகா மகத்தன்று ஒரு முழுக்குப் போட்டால் (28 சதவீத மலம், 40 சதவீத சிறுநீர்) சகல பாவங்களும் பறந்தோடும் என்று கூறும் கூட்டத்திடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?
இந்தக் கசமாலங்களை எடுத்துச் சொன்னால் ஒழுக்கக் கேட்டை வெளிப்படுத்தினால் தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், வீரமணியும் கசக்கிறது இந்தக் கசடர்களுக்கு!
உங்கள் அவிட்டுத் திரி காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது அய்யன்மார்களே!