கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணி

1 Min Read

கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். UCSL/IMS/HR/VN/F/11-ReN/2/OA/2025/33
பணி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள்: 8
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
ஊதியம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ. 25,000, இரண்டாம் ஆண்டு ரூ. 25.510, மூன்றாம் ஆண்டு ரூ. 26,040, நான்காம் ஆண்டு ரூ. 26.590, அய்ந்தாம் ஆண்டு ரூ. 27,.150
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். அதாவது 18.3. 1995-க்கு பின்னர் பிறந்த வராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in அல்லது www.udupicsl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.3.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *