ஹோலி பண்டிகையில் வண்ணப் பொடியை பிடிக்காதவர்கள் தார்ப்பாய் அணிந்து கொள்ளலாமாம்!
லக்னோ, மார்ச் 12 ேஹாலி கொண்டாட்டத்தின்போது வண் ணப் பொடியை படிக்காதவர்கள் தார்ப்பாய் அணிந்து கொள்ளலாம் என பா.ஜனதா பிரமுகர் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.
ேஹாலி
உத்தரப்பிரதேச தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உயர் அதிகார ஆலோசனை குழு தலைவர் ரகுராஜ் சிங். இவர், இணை அமைச்சருக்கு சமமான அந்தஸ்தில் இருப்பவர்.
ரகுராஜ் சிங் கூறியதாவது:-
ஹோலி கொண்டாட்டம் வெள் ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் தொழுகை காரணமாக, மாநில அரசு உஷார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் சிலர் ஆட்சேபனை எழுப்பி வருகிறார்கள்.
ஹோலி சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது. ஸநாதன தர்ம நம்பிக்கை சார்ந்த விஷயம். வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.
அன்றைய நாள், மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடுவதுபோல், முஸ்லிம் பெண்கள் ‘ஹிஜாப்’ அணிவதுபோல், முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட ‘ஹிஜாப்’ அணியலாம்.
அப்படி அணிந்துகொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லலாம். அவர் களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாது. எளிதாக தொழுகை நடத்தலாம். இந்துக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
ரகுராஜ் சிங்கின் கருத்து சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல், சமீபத்தில் சம்பல் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார்.
‘‘வண்ணப்பொடிகளை பிடிக் காதவர்கள், வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். ஹோலி பண்டிகை, ஆண்டுக்கு ஒருதடவை தான் வருகிறது. ஆனால், வெள்ளிக்கிழமை தொழுகை, ஆண்டுக்கு 52 தடவை வருகிறது” என்று அவர் கூறியி ருந் தார். அவரது கருத்துக்கு முதலமைச் சர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்க சர்ச்சை ஆனது.