டிஎச்டிசி நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

2 Min Read

டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129
நாட்டின் முன்னணி மின்துறை மற்றும் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமான டிஎச்டிசி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineer
பிரிவு: Civil – 30
பிரிவு: Electrical – 25
பிரிவு: Mechanical – 20
பிரிவு: Geology & Geo Technical – 7
பிரிவு: Environment – 8
பிரிவு: Mining – 7
பிரிவு: Wind Power Projects – 2
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு விண்ணப்பிப்போர் Geology, Applied Geology, Geological Technology பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.50,000 – 1,60,000
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Executive
பிரிவு: Human Resource
காலியிடங்கள்: 15
தகுதி: Personnel Management, IR, Labour Welfare பிரிவில் 60 சதவிகித மதிப் பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி யுடன் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Work, HR பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 15
தகுதி: சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.50,000 – 1,60,000
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மேனாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள்: 14.3.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *