கும்பகோணம் கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருநறையூர் கிளைக் கழகம் சார்பாக 2.3.2025 அன்று மாலை 6.00 மணியளவில் குடந்தை மாநகர தலைவர் இரமேஷின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி மனோரஞ்சிதத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ என்கிற தலைப்பில் கழகப் பேச்சாளர் பெரியார் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்ற எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கு.நிம்மதி தலைமையேற்றார். மாவட்ட காப்பாளர் இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், வேலூர் மாவட்டத் தலைவர் எழிலரசன், ஒன்றிய செயலாளர் முருகேசன், குடந்தை மாநகர செயலாளர் சிவக்குமார், பாபநாசம் ஒன்றிய தலைவர் பூவானந்தம், குடந்தை ஒன்றிய தலைவர் மகாலிங்கம், செயலாளர் செல்வம், மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி, குடந்தை மாநகர மகளிரணி செயலாளர் அம்பிகா, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட ப.க செயலாளர் சேதுராமன், ஒன்றிய துணைச் செயலாளர் குணா, மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர். திருநறையூர் திமுக பொறுப்பாளர் பீட்டர் நன்றி கூறினார். பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.