வல்லம், மார்ச் 12- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் இயந்திரவியல் துறை மாணவர்கள் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பரிசு களை வென்றனர்.
மாதிரி திட்டத்திற்கான இரண்டாம் பரிசுகள்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் மூன்றாமாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் கும்ப கோணம் அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் 07.03.2025 அன்று நடை பெற்ற “மெக்; இக்னிடோ – 2K25” (MECH IGNITO – 2K25) என்ற தலைப்பிலான தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத் தரங்கில் நடைபெற்ற மாதிரி திட்ட கண் காட்சியில் (Project Expo) கலந்து கொண்டு “Broom Stick Machine” என்ற மாதிரி திட்டத்தை வடிவமைத்த இக்கல்லூரியின் மூன்றா மாண்டு இயந்திரவியல் துறை மாணவர்கள் ச.உத்தண்டராமன், ஜெ.சுதர்சன் ஆகியோர் இரண்டாம் பரிசு மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.500-ம் பெற்றுக் கொண்டனர்.
பரிசுகளை வென்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை மிகு பரிசுகள்

Leave a Comment