வல்லம், மார்ச் 12- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு மகளிர் நாள் விழா 8.3.2025 அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இக்கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா தலைமைதாங்கி உரையாற்றும் போது மகளிர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம் மகளிர் நாளின் உன்னதமான நோக்கத்தையும் அவற்றின் அவசியத் தையும் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மகளிர் அனைவரும் தமது உரிமை களைப் பெற்று, கடமைகளை சிறப் பாக ஆற்ற வேண்டும் என்று கூறிய அவர் மகளிர் நாள் வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டார்.
முன்னதாக இக்கல்லூரியின் மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ் துறைத் தலைவர் தி.மாலதி வரவேற்புரை வழங்கினார். மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறைத்தலைவர் க.ரோஜா வாழ்த் துரை வழங்கிப் பேசும்போது முன்பு மகளிர் வாழ்வியலில் தாய் வழிச் சமூகம் என்ற அற்;புதமான பெண்ணியம் முக்கியத்துவத்தை பெற்றிருந்தது என்று கூறிய அவர் தந்தை பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் மகளிர் வாழ்வில் எவ்வாறு ஊக்கமளித்தது என்று குறிப்பிட்டார்.
கணினியியல் துறைத் தலைவர் மா.சண்முகப்பிரியா உரையாற்றும் போது மகளிர் அனைவரும் பெண் ணியச் சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவு மற்றும் சுதந்திரமான வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மின்னியல் மற்றும் மின்னணு வியல் துறையின் விரிவுரையாளர் ம.வனஜா உரையாற்றுகையில் சமு தாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார். முதலாமாண்டு வேதியியல் பேராசிரியர் ஞா.செங் கொடி உரையாற்றும் போது மகளிர் அனைவரும் உரிமைகளும், சமத்துவமும் பெற்று சாதனைகள் படைக்க வேண்டும் என்று கூறிய அவர் போராட்டங்களால் தான் மகளிர் உரிமைகளை பெற முடியும் என்று குறிப்பிட்டார்.
கட்டட எழிற்கலைத்துறையின் விரிவுரையாளர் ம.ராஜலெட்சுமி உரையாற்றும்போது மகளிர் தங்கள் சமூகத் தடைகளை உடைத்து ஆணாதிக்க சிந்தனைகளை தவிர்த்து கல்வியினாலும், அறிவியியல் சிந்தனைகளாலும் இவ்வுலகை அழகுடன் கூடிய ஆற்றல்மிகு மகளிர் சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார்.
பெண்கள் முன்னேற்றம் பற்றிய எழுச்சிமிகு பாடலை இக்கல் லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் ஏ.தர்ஷினி தனது இனிமையான பாடல் மூலம் விளக்கினார். இவ் விழாவில் அனைத்து மகளிர் பணியா ளர்களும் மற்றும் மாணவி களும் கலந்து கொண்டனர்.கணினியியல் துறையின் விரிவுரையாளர் அ.சாந்தி நன்றியுரை கூற இனிதே நிறைவுற்றது.