தமிழர் தலைவர் ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்காக ஆஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இன்று (12.3.2025) சென்றடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியா பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் அண்ணாமலை மகிழ்நன், துணைத் தலைவர் டாக்டர் ஹாரூன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர். உடன்: கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, அ.கபிலன், கோகுல், செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ், இனியரசன், ரேகா இனியரசன், குழந்தைகள் நெறியா, தமிழ் ஈவெரா ஆகியோர் உள்ளனர்.