கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

12.3.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.இன் திட்டமான புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். ரூ.10000 கோடி தந்தாலும் முடியாது என்று உறுதியாக சொல்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைக்காக யாருக்கும் பயப்படாமல் போராடுவோம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மாநில அரசுகளை பணிய வைக்க முயலாதீர்கள் நிதி மறுப்பு எனும் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது, தலையங்கம்.
* மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை, ஒன்றிய அரசு அமைதி ஏற்படுத்த தவறி விட்டது என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு.
* தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ரூ.3 லட்சம், தெலங்கானா அரசு அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஒடிசா மேனாள் முதலமைச்சருடன் தயாநிதி மாறன், டி.ஆர்.பி.ராஜா சந்திப்பு: 22ஆம் தேதி நடக்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் பங்கேற்க அழைப்பு
* குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங் களை தொகுதி மறுவரையறை தண்டிக்கும் என காங்கிரஸ் உறுப்பினரும் தகவல் தொடர்புப் பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ், மக்களவையில் பேச்சு.
* கல்வி அமைச்சகத்தின் செயல்பாடு குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திக் விஜய் சிங், மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பதவிகள் காலியாக இருப்பதாக குற்றச்சாட்டு.
தி இந்து:
* நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் ‘போராடும் மனப்பான்மை’ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
* ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவில் பல ஓட்டைகள் உள்ளன. தேர்தல் ஆணையத்திற்கு அட்டவணையை முடிவு செய்ய கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவது நல்லதல்ல என மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் விவாதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்ற பிறகு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றுவோம்: என மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் பாஜகவின் சுவேந்து அதிகாரி சர்ச்சை பேச்சு.
.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *