சென்னை, மார்ச்11- தமிழ்நாட்டின் முதல் பொரு ளாதார ஆய்வறிக்கை, பேர வையில் தமிழ் நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (14.3.2025) வெளியிடப்பட வுள்ளது.
ஒன்றிய அரசின் நடை முறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் படுவதற்கு ஒருநாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், தமிழ்நாட்டில் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் அமா்வு தொடங்குகிறது. இதனால் பொருளாதார ஆய்வறிக்கை பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பில்லை. கேரளம், கருநாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் இத்தகைய முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தனது முதல் பொரு ளாதார ஆய்வறிக்கை வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடை பெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட் டத்தொடரின் போது வெளி யிடப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்கு, பொதுநிதி, வறுமை, வேலை வாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த விவரம் இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
நிதிநிலை அறிக்கையுடன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்ய முடிவு
Leave a Comment