நாமக்கல், மார்ச் 10- 9.3.2025 அன்று காலை 10 மணி அளவில் நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தோக்கவாடி ஊராட்சி கிளைக் கழக துவக்க விழா, கொடியேற்று விழா, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்..மூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் கருமகவுண்டம்பாளையம் சமுதாயக்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வை மாவட்ட தலைவர் ஆ.கு.குமார் தலைமையேற்று நடத்தினார், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கணேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர், கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கழகக் கொடியை ஏற்றி நோக்கவுரை ஆற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியமையாரின் படங்களை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். கழகப் பேச்சாளர் பெரியார் செல்வம் சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் கடந்த 02.03.2025 அன்று நடைபெற்ற திருச்செங்கோடு நகரத் தலைவர் வெ. மோகனின் இணையேற்பு விழாவிற்கான வாழ்த்துரைகள் அவருக்கும் அவரது இணையருக்கும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக கிராமங்களில் கிளைக் கழகங்கள் திறப்பது பற்றி விவாதிக்கப்பட்டு விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச் செங்கோடு ஒன்றியச் செயலாளர் வட்டூர் ஜி.தங்கவேல், முன்னாள் திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.பி.கே.செல்வராஜ், வரகூராம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.ஜெ. மணீஷ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் டி.ஜெ.ரகுராம், பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி, சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா. பாலு, மேட்டூர் மாவட்ட செயலாளர் ப. கலைவாணன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் அ. சுரேஷ், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் என்.சேகர், குமாரபாளையம் நகரச் செயலாளர் ஆ. காமராஜ், நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.அசேன், நாமக்கல் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சு. சேகர், திருச்செங்கோடு நகர இளைஞரணித் தலைவர் கி. நந்தகுமார், நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீர முருகன், நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் மருத அறிவாயுதம், பள்ளி பாளையம் ஒன்றிய அமைப்பாளர் மு. சீனிவாசன், பொத்தனூர் நகரத் தலைவர் சா.அன்புமணி, பரமத்தி ஒன்றிய அமைப்பாளர் மு. செங்கோடன், பொத்தனூர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வசந்தி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் நிகழ்விற்கு குமார பாளையம் நகரத் தலைவர் சு. சரவணன் மற்றும் திருச் செங்கோடு நகரச் செயலாளர் மா. முத்துக்குமார் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.