ஜாதி ஒழிப்புக்குத் தக்கவிலை கொடுத்துத் தொண்டாற்றித்தான் வருகிறேன். இருந்தும் இந்த நாட்டில் ஜாதி முறை, கீழ் ஜாதி, மேல் ஜாதிப் பிரிவு அழுத்தமானதாக ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆட்சியும், ஆதிக்கமும் மேல் ஜாதிக்குச் சொந்தம், அவர்களிடத்தில் அவதியும், அல்லலும் படுவதே கீழ்ஜாதியினர்க்குச் சொந்தம். இது சட்டப்படி, சாத்திரப்படி, கடவுள் சிருஷ்டிப்படி இருந்து வருவதால் இவர்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’