ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் செய்ய வேண்டியவை…

1 Min Read

திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் இணையர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார் கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின்பற்றியாக வேண்டும். ஆண் களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம் தான் ஆயுளை குறைக்கிறது.  புகைப்பழக்கம் நுரையீரலின் ஆயுளை குறைத்து நாள்பட்ட நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். இணையர்களை பொறுத்தவரையில் ஆனந் தமான வாழ்க்கையே ஆரோக்கியம் காக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். திரு மணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் இணையர் கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இது தொடர்பான ஆய்வுக்காக திருமண மானவர்கள், திருமணமாகாதவர்கள் இரு வரின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்திருக் கிறார்கள். இதில் திருமணமாகாதவர்களை விட திருமணமான இணையர்களின் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது. அதேவேளையில் நிம்மதியாக வாழும் இணையர்களின் ரத்த அழுத்தம் இரவில் தூங்கும்போது சீராக இருப்பதும், சண்டையும், சச்சரவுமாக இருக்கும் தம்பதிகளின் ரத்த அழுத்தம் இரவிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதுவே இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துவிடுகிறது. வளரிளம்  பெண்களை பொறுத்தவரை காலையில் சாப் பிடாமல் பட்டினியாக இருந்தால் உடலளவை சரியாக இருக்க வைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி காலை உணவை தவிர்க் கும் பெண்கள், மற்றவர்களை விட உடல் பருமனாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குழந்தைகளை பொறுத்தவரை காலை உணவை சாப்பிடும் குழந்தைகள் சுறு சுறுப்பாக இருப்பதும், காலையில் ஒழுங்காக சாப்பிடாத குழந்தைகள் சோர்வாக இருப்ப தும், காலையில் சாப்பிடும் குழந்தைகளை விட சுமார் 2 கிலோ அதிகமாக இருப்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

டி.வி, கணினி, லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவழிப்பதை தடுப்பது குண்டா வதை தடுக்கும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *