தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
அரசு மருத்துவமனைகள் மூலம் 90 சதவீதத்துக்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டாலும், 2ஆவது தவணை செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், 100 சதவீதம் இலக்கை அடைய தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்த அரசு திட்டமிடுகிறது.