கணியூர், மார்ச் 9– கணியூர் முருகன் திருமண மண்டபத்தில் 8-3-2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் திராவிடர் கழக தாராபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் க. கிருஷ்ணன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் கே.என். புள்ளியான், மாவட்டத் துணைத் தலைவர் ச. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கி மயில்சாமி வழக்குரைஞர் நா.சக்திவேல் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கழக செயல்பாடுகள் அமைப்பு பணிகள் பிரச்சார பணிகள் குறித்து வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.
மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய அமைப்பாளர் நா.செல்வராஜ், தஞ்சை இளவரசன் மாவட்ட பகதலைவர் தி.வெங்கடாசலம், மாவட்ட பக செயலாளர் பு.முருகேசு, தாராபுரம் நகரத் தலைவர் இரா. சின்னப்பதாசு, நகர செயலாளர் ச.சித்திக், உடுமலை நகரத் தலைவர் த. முருகேசன், கணையூர் க. அர்ஜுனன், க. ராதாகிருஷ்ணன், பழ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
15- 2 -2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது .
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு தாராபுரம் மாவட்டத்தில் விடுதலைச் சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி பெரியார் சிலையுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தாராபுரம் மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து தருவதென முடிவு செய்யப்படுகிறது.
கிராமம் முதல் பேரூராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை பரவலாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் மேற் கொள்ளும் ஹிந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்து பண்பாட்டு பாதுகாப்பு பரப் புரைப் பயண வரவேற்பு பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மே 23 அன்று அனைத்து தோழர்களும் பெரும் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.