தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி.கே.கலைவாணன், க.மாரிமுத்து, தாட்கோ தலைவர் உ.மதிவாணன், மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனசந்திரன், திருத்துறைப்பூண்டி நகராட்சித் தலைவர் கவிதா பாண்டியன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.