சென்னை, மார்ச் 9- முதல்வர் மருந்தகத்தில் மாத்திரை விலை அதிகம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
வதந்தி
சர்க்கரை நோய்க்கான வில்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை(15) பிரதமரின் மக்கள் மருந்தகத்தில் ரூ.30க்கும், முதல்வர் மருந்தகத்தில் ரூ.35க்கும் விற்கப்படுவதாக இரு மாத்திரை அட்டைகளுடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
வில்டாகிளிப்டின் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு மாத்திரை(15) அட்டையின் விலை ரூ.36 என்றுள்ளது. ஆனால், முதல்வர் மருந்தகத்தில் ரூ.9 தள்ளுபடி(25%) போக 15 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.27க்கே விற்பனையாகிறது. மாத்திரை அட்டையில் உள்ள விலையை மட்டும் வைத்து முதல்வர் மருந்தகத்தில் விலை அதிகமாக உள்ளதாகத் திரித்து வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
வதந்தியைப் பரப்பாதீர்