செய்தி: டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2500 தருவதாக தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு இப்பொழுது வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்குத் தான் என்று கூறுகிறது டில்லி பாஜக அரசு.
சிந்தனை: வாயை கொடுப்பானேன் வசமாக மாட்டு வானேன் என்பது இதுதான்.
செய்தி: 2026 ஆம் ஆண்டில் திமுக அரசை எல்லோரும் சேர்ந்து மாற்றுவோம் – நடிகர் விஜய் வெளி யிட்ட வீடியோ.
சிந்தனை: எல்லோரும் என்றால் கூட்டணிக் கட்சிகளை தேடுகிறார் என்று தானே அர்த்தம் – கூட்டணி சேர்பவர் களும் இவரை முதலமைச்சராகவும் ஏற்க வேண்டுமே – நல்ல தமாஷ்.