ஏ.அய். பொறியியலாளராகலாம்
சமீபகாலமாக AI இன்ஜினியர்களுக்கும் டிமாண்ட் எகிறியுள்ளது. AI இன்ஜினியர் ஆக மாணவர்கள் இந்த விஷயங்களை கடைப்பிடித்தாலே போதும். ப்ளஸ் 2-க்கு பின்னர் AI, மிஷின் லாங்வேஜ், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது டேட்டா சயின்ஸில் பி.இ. அல்லது பி.டெக். சேருங்கள். PYTHON, JAVA, C++, R 1 CODING லாங்வேஜ்களை கற்றுக்கொள்ளுங்கள். இன்டன்ஷிப்கள், ஹேக்கத்தான்கள் மற்றும் AI போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்களை பெறுங்கள்.
இங்கல்ல உ.பி.யில்
சிறுமியை 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் 14 வயது தாழ்த்தப்பட்ட சமூக சிறுமியை 4 பேர் கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சிறுமியை கடத்திச்சென்று பல நாள்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த அக்கும்பல், கையில் இருந்த ஓம் டாட்டுவை அழிக்க ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறது.
அத்துமீறிய கோயில் பூசாரி மாணவி விபரீத முடிவு
அரியானாவில் ப்ளஸ் 2 மாணவிக்கு நடந்த கொடூரம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அங்குள்ள கனோர் பகுதியைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவியை 2 இளைஞர்களும், கோயில் பூசாரி ஒருவரும் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த மாணவி, ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பா.ஜ.க.மாநில செயலாளர் கைது
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காரப்பாக்கத்தில் மாணவர்களின் கைகளைப் பிடித்து இழுத்து பாஜகவினர் கையெழுத்து பெற்றதாக குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு காவல் துறையில் புகார் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அத்தொகுதியில் போட்டியிட்ட வழக்குரைஞர் எம்.எல்.ரவி வழக்குத் தொடுத்திருந்தார். இதன்மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை எனக் கூறிய உயர்நீதிமன்றம், தயாநிதியின் வெற்றி செல்லும் என அறிவித்ததோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது.