சென்னை, ஜூலை 11 சிறீ சாய் ராம் கல்விக் குழும தாளாளர் அரிமா லியோ முத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி சிறீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் 10.07.2023 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் நன்கு பயிலும் கிராமப்புற மாணவ / மாணவி களுக்கு அவர்களது படிப்பு, தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட்ட தேவை யான செலவுகளையும் மற்றும் உயர் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்கள், பல்வேறு தொழில்நுட்ப போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் லியோமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக சுமார் பத்து கோடி ரூபாய் இந்த ஆண்டிற்கான கல்வி உதவித் தொகையை ஏற்றுக் கொள்வதாக சாய்பிரகாஷ் லியோமுத்து கூறினார்.
மேலும் சாய்ராம் பொறியியல் கல்லூரி சார்பில் பூந்தண்டலம் ஊராட்சி புது நல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூபாய். 3.25 லட்சத்தில் சூரிய மின் வசதி திட்டத்தினை உருவாக்கி கொடுத்ததில் பெருமிதம் கொள்கிறோம். விபிஸிஞி ஹிஙிகி மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமப்புற பள்ளிகளுக்கு தேவையான வகுப்பறை உபகரணங்களை கல்வி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
தாளாளர் லியோ முத்து அறக்கட்ட ளையின் நோக்கம், ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி அவர்களுடைய மகிழ்ச்சி மிகவும் முக்கியம் என்று கருதும் இம் மாபெரும் மனிதனின் நினைவு நாளில் இன்னும் பலருக்கு பயன்படக்கூடிய சிறந்த சேவையை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கல்லூரியின் தலைவர். சாய்பிரகாஷ் லியோமுத்து, கூறி பெருமிதம் அடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந் தினர்கள் கலந்து கொண்டு தாளாளர் லியோமுத்து அய்யா அவர்களின் தன் னலமற்ற வாழ்க்கை, விடாமுயற்சி மற்றும் அவர்களின் நிறுவனங்களின் வளர்ச்சியைப்பற்றி பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அறக் கட்டளை துணைத்தலைவர். கலைச் செல்வி லியோமுத்து, நிர்வாக இயக்குனர். எஸ். சத்தியமூர்த்தி, அறங் காவலர்கள் சர்மிளா ராஜா, ரேவதி சாய்பிரகாஷ், மூர்த்தி, சதிஷ்குமார், முனுசாமி, பாலசுப்ரமணியம், கல்லூரி முதல்வர்கள் முனைவர் கே.பொற் குமரன், முனைவர். கே.பழனிகுமார், முனைவர் கே.மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.