ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

Viduthalai
1 Min Read

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (14-7-2023 சென்னை)

🌟வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

🌟 வாழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

🌟வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!

🌟 வெல்லட்டும் வெல்லட்டும்

சமூகநீதிப் போராட்டம்!

🌟 ஓங்கட்டும் ஓங்கட்டும்

ஒடுக்கப்பட்டோர் போராட்டம்!

🌟 பறிக்காதே பறிக்காதே!

தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வுரிமையைப் பறிக்காதே!

🌟 பறிக்காதே பறிக்காதே!

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்காதே!

🌟 அரசுடைமை வங்கிகளில்

தமிழ்நாட்டில் பணியாற்ற

வடநாட்டவர்க்கு முன்னுரிமையா?

🌟 தமிழ்நாட்டின் வங்கிச் சேவைக்கு

தமிழ் மொழி தேவையில்லையா?

🌟 நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து!

வங்கி எழுத்தர் பணிகளுக்கு

மாநில மொழிகள் அவசியமென்பதை

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து!

🌟 திணிக்காதே திணிக்காதே

மறைமுகமாக ஹிந்தி மொழியைத்

திணிக்காதே! திணிக்காதே! தமிழ்நாட்டு வங்கிகளிலும்

வடநாட்டவர்க்கே வேலை என்றால்

படித்து முடித்து வேலைக்காகக்

காத்திருக்கும் தமிழர்களுக்கு

எதிர்காலம் இருளாவதா?

🌟 உறுதிப்படுத்து உறுதிப்படுத்து!

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள்

தமிழர்க்கென்று உறுதிப்படுத்து!

🌟 உறுதிப்படுத்து உறுதிப்படுத்து!

தமிழ்நாட்டின் வங்கிச் சேவை

தமிழில் என்று உறுதிப்படுத்து!

🌟உறுதிப்படுத்து உறுதிப்படுத்து!

ஏடிஎம் இயந்திரங்களிலும்

தமிழ்ச் சேவையை உறுதிப்படுத்து!

🌟நடைமுறைப்படுத்து நடைமுறைப்படுத்து!

அரசுப் பணிகள் அனைத்திலும்

உயரதிகாரப் பதவிகளிலும்

இட ஒதுக்கீட்டை முழுமையாக

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து!

🌟பறிக்காதே பறிக்காதே!

இடஒதுக்கீட்டுப் பயனாளர்களின்

பணிமூப்பைப் பறிக்காதே!

🌟 ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து!

🌟 ரத்து செய்! ரத்து செய்!

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை

ரத்து செய்! ரத்து செய்!

🌟இளைஞர்களே! இளைஞர்களே!

தமிழ்நாட்டின் இளைஞர்களே!

ஜாதியில்லை! சமயமில்லை!

பாலின பேதமில்லை!

அனைவருக்கும் ஆபத்து!

திரண்டு வாரீர்! திரண்டு வாரீர்!

🌟ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *