பெரம்பலூர், மார்ச் 8- போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூரில் மொத்தம் ரூ.4.64 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
93 கடைகளைக் கொண்ட தினசரி காய்கறி சந்தை கட்டுமானத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் சேதமடைந்திருந்த தினசரி சந்தை இடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சந்தை கட்lடம் கட்டப்பட உள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2024-2025 இன் கீழ் ரூ.2.48 கோடி செலவில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பெரம்பலூர் நகராட்சி எல்லையில் மொத்தம் 4.24 கிலோமீட்டர் தூரத்திற்கு 26 இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள சாலை மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். துறைமங்கலத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சுவா, பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் கே.என். அருண் நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.