கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

11.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

👉தெலங்கானா பாஜக தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலக முடிவு. முயல்-ஆமை கதை போல தங்கள் கட்சி தற்போது காங்கிரஸ் கட்சியிடம் பின்னடைந்து இருப்பதாக கருத்து.

👉பொது சிவில் சட்டத்திற்கு சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி எதிர்ப்பு.

👉 மோடி அரசு ‘அன்ன பாக்யா’ திட்டத்திற்கு அரிசி தர மறுத்த நிலையில், மாதம் 5 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.170 பணமாக பயனாளிகள் கணக்கில் வரவு வைத்திடும் திட்டம் கருநாடகாவில் தொடங்கியது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

👉மகாராட்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவார் பாஜக கூட்டணியில் சேர்ந்த நிலையில், மோடியின் ஒன்றிய அமைச்சரவையில் கட்சி மாறிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 ஒன்றிய மாநில அரசுகள் தாமதமான நடவடிக்கை காரணமாக, குக்கி சமூக மக்கள் பிரிந்து வாழும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்கு பயணம் செய்த சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பேட்டி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையிடுகிறார்கள்; ஆர்.என். ரவியை நீக்க முதலமைச்சர் கோருவது சரியே என்கிறார் கபில் சிபல். 

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *