மாதிரி திட்ட போட்டி
சிவகாசி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மாதிரி திட்ட போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் எம்.மாதேஷ் மற்றும் எஸ்.நந்தனன் ஆகியோர் முதல் பரிசுக்கான கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை ISTE (Indian Society for Technical Education) வாயிலாக பெற்றனர்.
சுவரொட்டி
விளக்க காட்சி
மேலும் அக்கல்லூரியில் நடைபெற்ற சுவரொட்டி விளக்க காட்சியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு கட்டட எழிற்கலை துறை மாணவன் செல்வன் எஸ்.சான்ட்;ரஸ் தனது அழகான சுவரொட்டி விளக்க காட்சியின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்து இரண்டாம் பரிசை வென்றார்.
சிறப்பு அங்கீகாரத்திற்கான விருது
சிவகாசி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்திய தொழில் நுட்பக் கல்வி கழக தமிழ்நாடு பிரிவின் கீழ் நடைபெற்ற பாலிடெக்னிக் மாணவர்களுக்கான ஆண்டுக் கூட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகள் பெற்றதற்கான சிறப்பு அங்கீகாரத்திற்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் 35 மாணவர்களுக்கு ISTE வாயிலாக வழங்கப்பட்டது.
இப்பெருமைமிகு பரிசுகளை பெற்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.