திருச்சி, நவ.27 திருச்சி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி திருச்சி புத்தூரில் நேற்று நடந்தது. ஸ்டார் செஸ் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்ட னர். போட்டிகள் 7, 10, 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் நடந்தன. போட்டிகளை சர்வதேச நடுவர் தினகரன், இஸ்மாயில் தொடங்கி வைத்தனர். போட்டிகளின் முடிவில் 7 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ஆத்யா இஷானா 4 புள்ளிகளுடனும், சிறீராம் மணிவண்ணன் 5 புள்ளிகளுடனும் முதலிடத்தை பிடித்தனர். 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கிரிஷோத் (6 புள்ளிகள்), ஹர்சிதா (5 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை வென்றனர். 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தர்சன் ரத்னாகரும் (6 புள்ளிகள்), கோவர்த்தினியும் (4 புள்ளி கள்), 16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முகேசும் (5 புள்ளிகள்), விதுலாஅன்புசெல்வனும் (4 புள்ளிகள்) முதலிடத்தை தட்டிச்சென்றனர்.