துறையூர், மார்ச் 7- துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 5.3.2025 மாலை 7 மணிக்கு துறையூர் ஹோட்டல் ஜான் மீட்டிங் ஹாலில் துறையூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் ச.மணிவண் ணன் தலைமை தாங்கினார். மாநில ப.க. அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார். மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை. இரா. ஜெயக்குமார் சிதம்பரம் பொதுக்குழு தீர்மானம் கிளைக் கழகங்கள் அமைத்தல். சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குதல். விடுதலை நாளிதழுக்கு சந்தாக்கள் வழங்குதல் ஆகியவை உள்ளிட்ட கழக வளர்ச்சி பற்றி விளக்கமாக உரையாற்றினார். புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் பெ பாலகிருஷ்ணன். இரா. நந்தகுமார் ஆகியோருக்கு பயனாடை அணிவித்தார்.தஞ்சை இரா. ஜெயக்குமாருக்கு மாவட்ட தலைவர் பயனாடை அணிவித்தார். இறுதியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார் நன்றியுரை கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி. துறையூர் ஒன்றிய தலைவர் இர.வரதராஜன்.மாவட்ட ப. க. தலைவர் பாஸ்கர். மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ். மாவட்ட ப. க. துணை தலைவர் எஸ். என். புதூர். கருணாகரன். உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர். மாராடி. எம். ஏ. இ ரமேஷ். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சு. சரண் ராஜ். மாவட்ட மாணவர் கழக தலைவர் ரெ. தன்ராஜ். துறையூர் நகர செயலாளர் ந.இளையராஜா. ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கண்ணனூர் ப. குணாள். நகர் ப. க. அமைப்பாளர் வழக்குரைஞர். அ. தமிழ்செல்வன். ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.