திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு
தஞ்சை, மார்ச் 7- திமுக தஞ்சாவூர் நகர்மன்ற மேனாள் துணைத் தலைவர் ந.பூபதி-ரூபாவதி பூபதி இல்லத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உருவச் சிலையினை 03-03-2025 காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர்,திமுக மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர் மருத்துவர் அஞ்சுகம்பூபதி திறந்து வைத்தார்.
பூபதி அவர்களின் பேரக்குழந்தைகள் அ.வெ.கயல் ரா.தன்மையா ஆகியோர் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். ரூபாவதி பூபதி, திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பூபதி.ராஜராஜன்-கீர்த்தனா ஆகியோர் உடன் இருந்தனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி. அமிர்சிங், மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார் பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணைச்செயலாளர் ஆ.லட்சுமணன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், ரூட்டேட் ஒளிப்படக் கலைஞர் பாரதிதேவா ஆகியோர் டாக்டர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.